முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் தும்கூர், திப்டூர் பகுதியில் 32-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2022      இந்தியா
Rahul 2022--10-09

Source: provided

பெங்களூர் : காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நேற்று கர்நாடக மாநிலம் தும்கூர், திப்டூர் பகுதியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார். ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள பாரத் ஜோடோ யாத்திரை'தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்தில் தற்போது நடந்து வருகிறது.

இதற்கிடையே, ஒரு மாதத்தை கடந்து பாதயாத்திரை செல்லும் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தும்கூர் மாவட்டத்துக்குள் நுழைந்தார். அவருக்கு தும்கூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஹரிதாசனஹள்ளி பகுதியில் ராகுல்காந்தி பாதயாத்திரையை நிறைவு செய்தார். 

இந்த நிலையில் நேற்று 32-வது நாளாக கர்நாடக மாநிலம் தும்கூர், திப்டூரில் இருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். இந்த நடைபயணத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.  தும்கூர், திப்டூர் பகுதியில் பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி சிக்கன்யகஹள்ளி பகுதியில் நிறைவு செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து