முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகை தினத்தில் புதுச்சேரியில் 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2022      தமிழகம்
Fireworks-shop 2022--10-07

தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி தமிழகம் உட்பட நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க இதே நேரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஒலி எழுப்பும் வெடிகள் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடி பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடுக்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் தீபாவளி அன்று காலை 6 - 7 மணி, இரவு 7 - 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என புதுச்சேரி கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து