முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கானுக்கு மீண்டும் கமாண்டோ படை பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2022      உலகம்
Imran-Khan 2022--09-30

Source: provided

இஸ்லாமாபாத் : உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இம்ரான்கானுக்கு மீண்டும் கமாண்டோ படை பாதுகாப்பு போடப்பட்டது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வாரம் வாஜிரிபாத் நகரில் நடந்த போராட்ட பேரணியில் கலந்து கொண்ட போது துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவரது காலில் குண்டு பாய்ந்து படுகாயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இதன் காரணமாக இம்ரான்கானுக்கும், அவரது மகன்களுக்கும் கைபர் பக்துங்குவா மாகாண போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இம்ரான்கானின் ஜமான் பார்க் இல்லத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த இல்லத்துக்கு வெளியே மணல் மூட்டைகள் மற்றும் சிமெண்ட் பிளாக்குகள் கொண்டு பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பஞ்சாப் மாகாண முதல்வரின் உள்துறை விவகார அந்தரங்க உதவியாளர் உமர் சர்பிராஸ் சீமா கூறுகையில், இம்ரான்கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து