முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் முதல் தனியார் ராக்கெட் நாளை விண்ணில் ஏவ திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2022      இந்தியா
Vikram-S 2022-11-13

Source: provided

புதுடெல்லி : இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை வரும் 15-ம் தேதி விண்ணில் ஏவ இருப்பதாக ஐதராபாத்தின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்கலாம் என்று கடந்த 2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, விண்வெளி துறையில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின.

இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக விக்ரம்-எஸ் எனும் தனியார் ராக்கெட்டை விண்ணில் ஏவ உள்ளது.

இந்த ராக்கெட் நாளை 15-ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிட்டுள்ளதாக ஸ்கைரூட்  நிறுவனத்தின் சி.இ.ஓ. பவன் குமார் சந்தானா கூறி உள்ளார்.

காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் இந்த ராக்கெட்டில் சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட் அட் நிறுவனத்தின் ஸ்பேஸ் கிட்ஸ் எனும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 2.5 கிலோ பேலோடு அனுப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து