முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2022      இந்தியா
BJP 2022-11-13

Source: provided

காந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க.வின்  2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜ.க. ஏற்கனவே 160 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது.

அதில் முதல்வர் பூபேந்திர படேல், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த ஹர்திக் படேல், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவபா உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்று இருந்தன. தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப் படவில்லை. 

இந்த நிலையில் பா.ஜ.க.வின்  2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பா.ஜ.க. 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இதற்கிடையே பா.ஜ.க.வில் சீட் கிடைக்காததால் தற்போதைய எம்.எல்.ஏ. மற்றும் 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆகிய 5 பேர் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி 104 தொகுதிகளுக்கும், ஆம் ஆத்மி 176 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து