முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்: தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை குறையும் - 16-ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பு?

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2022      இந்தியா
India-Meteorological 2022--

Source: provided

புதுடெல்லி : தமிழகத்தில் இன்று முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 16-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்  என்றும் தெரிவித்துள்ளது.  

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வளிமண்டல சுழற்சியாக வலுவிழந்து அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும். நாளை 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 16-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், இன்று 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து