முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் ஜி-20 மாநாடு: இங்கிலாந்து பிரதமர் ரிஷியை சந்திக்கிறார் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2022      உலகம்
Modi-1 2022-11-14

Source: provided

ஜகார்தா : இன்று நடக்கவிருக்கும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி நாளை இங்கிலாந்து பிரதமர் ரிஷியை சந்தித்து பேசுகிறார்.

ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்றும்  (15ம் தேதி), நாளையும் (16ம் தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் இந்தோனேசியாவுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக செல்கிறார்.

ஜி-20 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கம் குறித்து மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முக்கியமாக விவாதிக்க உள்ளனர். உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றும், சுகாதாரம் தொடர்பான 3 முக்கிய அமர்வுகளில் மோடி பங்கேற்க உள்ளார்.

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1 முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்தியா வகிக்க இருக்கிறது. எனவே பாலி மாநாட்டில் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெறும். மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேசிய அதிபரிடம் இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வார்.

அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இதர நாடுகளின் தலைவர்களுக்கு மோடி இந்த மாநாட்டின்போது அழைப்பு விடுப்பார். அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபபர் இமானு வேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.

நாளை பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரடியாக சந்தித்து பேசுகிறார். இதுதவிர பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியில் பிரதமர் மோடி 45 மணி நேரம் செலவிட இருக்கிறார். அங்கு அவர் சுமார் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். மாநாடு நிகழ்வுகள் முடிந்து 16ம் தேதி பாலியில் இருந்து மோடி நாடு திரும்புகிறார். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து