முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : ஜனவரி 23ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்கக் கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்கக் கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இதுபோன்ற முடிவுகள் அரசின் கொள்கையின் ஒரு பகுதி என்று கோர்ட்டு கூறியது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய விடுமுறை அறிவிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது அரசின் கொள்கையின் விஷயம் என்று கூறிய நீதிபதிகள் மனுவை ஏற்க மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் நிர்வாகத்தின் கொள்கை வகுப்பின் வரம்பிற்குள் வருவதால், எந்தவொரு குறிப்பிட்ட முடிவையும் எடுக்குமாறு அரசாங்கத்தை நீதிமன்றம் கோர முடியாது என்று கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

நேதாஜியின் சேவைகளை அங்கீகரிப்பதற்கான சிறந்த வழி, இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்ததைப் போல, நாமும் கடுமையாக உழைப்பதே சிறந்த வழி என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து