முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச.7-ம் தேதி தொங்குகிறது: பழைய கட்டிடத்திலேயே நடைபெறுகிறது

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2022      இந்தியா
Parliament 2022-11-14

டிசம்பர் 7 முதல் 29-ஆம் தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவை பாராளுமன்ற விவகாரத் துறை விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பழைய கட்டிடத்தில் நடந்தாலும் கூட அரசாங்கம் புது பாராளுமன்ற கட்டிடத்தின் துவக்க விழாவை டிசம்பர் இறுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ரூ.1200 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் வெகு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

பொதுவாக, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3-வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், சில நேரங்களில் டிசம்பரில் நடந்துள்ளது. 2017, 2018 ஆம் ஆண்டுகளில் இவ்வாறாக குளிர்கால கூட்டம் டிசம்பரில் நடந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1, 5 தேதிகளில் நடைபெறும் நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதனை ஒட்டியும், புதிய பாராளுமன்ற கட்டிடப் பணிகள் குறித்த நேரத்தைக் காட்டிலும் நீண்டு செல்வதாலும் இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், இந்த குளிர்கால கூட்டத்தொடரை பழைய கட்டிதத்திலேயே நடத்திவிட்டு பட்ஜெட் தொடரை புதிய கட்டிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குளிர்கால கூட்டத்தொடரில் அரசு 1500-க்கும் மேற்பட்ட பழைய வழக்கொழிந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து