முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி20 மாநாட்டுக்கு சென்ற போது பரிசோதனை: கம்போடியா பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2022      உலகம்
Hun-Sen 2022-11-15

Source: provided

நாம்பென் : அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆசிய மாநாட்டை நடத்திய நிலையில், கம்போடிய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க கம்போடிய பிரதமர் ஹன் சென் புறப்பட்டு சென்றுள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் மாலை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளிவந்ததில்  கம்போடிய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

சமீபத்தில் கம்போடியாவின் நாம்பென் நகரில் நடந்த ஆசியன் மாநாட்டில், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுடன் 8 தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்கள், கம்போடிய பிரதமர் ஹன் சென்னுடன் முக கவசமின்றி ஒன்றாக சந்தித்து கொண்ட சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்த நிலையில், சென்னுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. 

இதனை தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்ட சென், அன்பிற்குரிய சக நாட்டு தலைவர்களே,  இந்தோனேசியாவில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வந்த போது, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால், எந்த அறிகுறிகளும் எனக்கு இல்லை. ஒவ்வொரு நாளும் பாலிக்கு வருவதற்கு முன் பரிசோதனை செய்து, அதில் கொரோனா தொற்றில்லை என முடிவுகள் வந்து கொண்டிருந்தன. ஆனால், இந்த தொற்று தற்போது எப்படி ஏற்பட்டது என உறுதியாக எனக்கு தெரியவில்லை. 

நேற்று காலை இந்தோனேசிய அதிகாரிகள் கொரோனா தொற்றை உறுதி செய்துள்ளனர். நான் பாலிக்கு காலதாமதமுடன் வந்தது ஒரு வகையில் அதிர்ஷ்டம். அதனால், பிற தலைவர்களுடன் இரவு உணவு சாப்பிட முடியாமல் போய் விட்டது என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து