முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டுதோறும் இந்தியர்கள் 3 ஆயிரம் பேருக்கு கிரீன் விசா இங்கிலாந்து அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 16 நவம்பர் 2022      உலகம்
Modi-Rishisunak 2022-11-16

ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க உள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.  

ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு, இந்தோனேசியாவில் பாலித்தீவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஜலன் நுசாதுவாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், இந்திய வம்சாளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கும் சந்தித்த சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பட்டப்படிப்பு முடித்த 30 வயது வரையிலானவர்கள் இந்த விசாவைப் பெற்று 2 ஆண்டுகள் வரையில் இங்கிலாந்தில் பணியாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து