முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறி விழப் போன ஜோ பைடனை தாங்கி பிடித்த இந்தோனேசிய அதிபர்

புதன்கிழமை, 16 நவம்பர் 2022      உலகம்
Joe-Biden 2022-11-16

இந்தோனேசியாவில் வழிபாட்டு தலத்தின் படியில் ஏறும் போது தவறி விழப் போன அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தாங்கிப் பிடித்து பாதுகாத்து உள்ளார். 

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.  இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி,  சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர். 

இந்த நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று 2-வது நாளில், பாலி நகரில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பார்வையாளர்களாக சென்றனர். இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ஜி-20 அமைப்பின் பிற தலைவர்களும் மாங்குரோவ் வன பகுதிக்கு சென்றனர். பின்பு மரக்கன்றுகளையும் அவர்கள் நட்டனர். இதன் பின்பு, இயற்கை எழில் சூழ்ந்த பகுதியை தலைவர்கள் சுற்றி பார்த்தனர். 

அவற்றில், வழிபாட்டு தலம் ஒன்றை பார்வையிட அதிபர் பைடன் அழைத்து செல்லப்பட்டார். அவருடன் இந்தோனேசிய அதிபர் விடோடோ சென்றுள்ளார். இதன்படி, படியில் ஏறி மேலே சென்ற போது, அதிபர் பைடன் திடீரென தவறி விழப் போனார். அருகே வழி நடத்திச் சென்ற இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, உடனடியாக அவரது கையை பிடித்து, கீழே விழுந்து விடாமல் பாதுகாப்புடன் அழைத்து சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து