முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியின் மாங்குரோவ் காடுகளை பார்வையிட்ட உலகத் தலைவர்கள்

புதன்கிழமை, 16 நவம்பர் 2022      உலகம்
Mod-1 2022-11-16

Source: provided

பாலி : இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று மாநாட்டின் ஒரு பகுதியாக உலக நாடுகளின் தலைவர்களுடன் பாலி தீவில் உள்ள மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளைப் பார்வையிட்டனர்.

ஜி-20 மாநாட்டின் அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்துப் பேசி வருகிறார். குறிப்பாக, இங்கிலாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

உலக வங்கி தலைவ டேவிட் மால்பாஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே, ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்தார். நேற்று உலகத் தலைவர்கள், பாலி தீவில் உள்ள டமன் ஹுட்டான் ராயன் மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளைப் பார்வையிட்டனர். பின்னர் அங்கு மரம் நட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து