முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு வேளை அசைவ உணவுக்கு ரூ. 1.3 கோடி செலுத்திய நபர்: வரி மட்டும் ரூ. 6.5 லட்சமாம்!

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022      உலகம்
Dubai 2022-11-19

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ஒருவேளை அசைவ உணவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் ரூ. 1.3 கோடி செலுத்தியுள்ளார். அதில் அந்த உணவுக்காக மதிப்புக் கூட்டு வரி (வாட்) மட்டும் ரூ.6.5 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் துருக்கியைச் சேர்ந்த நுஸ்ரெட் கோக்சி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.  சமையல் கலை வல்லுநரான அவரின் உணவகத்தில், அவர் தயாரிக்கும் உணவுகளுக்கு கூடுதல் விலை கொடுத்து உண்பதற்கு வாடிக்கையாளர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.  ஒரு நபரின் ஒருவேளை இரவு உணவுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 22,000 கொடுத்து உண்பதற்கு அதிக அளவு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது துபாய் நாணய மதிப்பில் 1000 திராம் ஆகும்.

இந்நிலையில், சமீபத்தில் கோக்சி சமைத்த ஒருவேளை உணவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.3 கோடி பணம் செலுத்தியுள்ளார். துபை நாணய மதிப்பில் 140,584 திராம் ஆகும். இந்த உணவுக்கான மதிப்புக் கூட்டுவரி மட்டும் ரூ. 6.5 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. உணவுக்கான ரசீதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுஸ்ரெட் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து