முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பில் ஒருவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2022      உலகம்
China-Corona 2022-11-20

Source: provided

பெய்ஜிங் ; சீனாவில் 5 மாதங்களுக்கு பிறகு பெய்ஜிங் நகரைச் சேர்ந்த 87 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், இந்த மாதம் கொரோனா தொற்று மளமளவென உயர்ந்து, தினசரி 25 ஆயிரம் பாதிப்புகள் வரை பதிவாகி வருகிறது. இருப்பினும் அங்கு கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாமலேயே இருந்து வந்தது. 

சீனாவில் கடைசியாக கடந்த மே மாதம் 26-ம் தேதி கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். அதன் பிறகு கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அங்கு கொரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இந்நிலையில் நேற்று  சீனாவின் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த 87 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,227 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகளை இதயக்கோளாறு, சர்க்கரை நோய் உள்ளிட்ட மற்ற உடல்நல பாதிப்புகளாக சீன சுகாதாரத்துறை பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை சீன அரசு மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து