முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு: ஈரானின் 2 பிரபல நடிகைகள் கைது

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      உலகம்
Iran-2-Actress 2022-11-21

Source: provided

தெஹ்ரான் :  ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகைகள் இருவரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹென்காமெஹ் காசியானி, காதாயூன் ஆகியோர் ஈரானின் பிரபல நடிகைகள். இருவரும் சர்வதேச அளவில் சிறந்த நடிகர்களுக்கான விருதுகளை வென்றவர்கள். இவ்விருவரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். தங்களது நடவடிக்கைகளுக்காக இருவரும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ஹென்காமெஹ் காசியானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடும்போது, ”இந்த நிமிடத்திலிருந்து, எனக்கு என்ன நடந்தாலும், எப்போதும் போல, எனது கடைசி மூச்சு வரை நான் ஈரானிய மக்களுடன் இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில், பொதுவெளியில் தங்களது ஹிஜாப்பை நீக்கியதற்காக ஹென்காமெஹ் காசியானி, காதாயூன் ஆகியோரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இருவரது கைது நடவடிக்கையும் ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து