முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம்: நாசா புதிய தகவல்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      உலகம்
NASA 2022 11 21

Source: provided

நியூயார்க் : 2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம், பணி செய்யலாம் என நாசா தெரிவித்துள்ளது.

புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பைக் காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்திருந்தது.

அதன்படி ஆகஸ்ட் மாதமே ஆர்டெமிஸ் ஏவுகணையை விண்ணில் செலுத்த நாசா தயாராகி இருந்தது .எனினும் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நிலவுக்கு ஆர்டெமிஸ் ஏவுகணையை நாசா விண்ணில் செலுத்தியது.

இது குறித்து அமெரிக்க ஓரியன் சந்திர விண்கலத் திட்டத்தின் தலைவர் ஹோவர்ட் ஹூ, கூறும்போது, “ 2030 ஆம் ஆண்டுக்கு முன் மனிதர்கள் நிலவில் வாழலாம். அங்கு அவர்களுக்கு தேவையான பணியை செய்யலாம்.

இது நாசாவுக்கு வரலாற்று நாள். அதுமட்டுமல்ல விண்வெளி ஆராய்ச்சிகளை விரும்பும் அனைவருக்கும் இது சிறந்த நாள். அதாவது, நாம் சந்திரனுக்குத் திரும்பிச் செல்கிறோம். அதற்காகவே இந்த நிலையான (ஆர்டெமிஸ் ) திட்டத்தை நோக்கி செயல்படுகிறோம். இது மக்களை சுமந்து செல்லும் வாகனமாகும், அது மீண்டும் நிலவில் நம்மைத் தரையிறக்கும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து