முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்டைக்காளி விமர்சனம்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      சினிமா
Pettayakali-review 2022 11

Source: provided

ஜல்லிக்கட்டு கதை களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள வெப்சீரிஸ் பேட்டைக்காளி. ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் புதிய படைப்பாக இத்தொடர் வெளியாகியுள்ளது. கதை; பண்ணை குடும்பத்திற்கும், அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையில் இருந்து தொடங்குகிறது படம். நிலமின்றி, வேலையின்றி அகதிகளாக வாழும் விவசாய கூலிகளுக்கு தலைமை ஏற்கிறார் கிஷோர். கவுரவம், ஆதிக்கம் என மூதாதையர் பாணியில் வாழ்வியலை தொடர்கிறார் வேல.ராமமூர்த்தி. கிஷோரின் அக்கா மகனான கலையரசன், சிறந்த மாடுபிடி வீரராக இருக்கிறார். இந்த நேரத்தில் அஞ்சு நாடு மஞ்சுவிரட்டு அறிவிக்கப்படுகிறது. விவசாய கூலிகள் யாரும், மணியக்காரரின் காளையை தொடவோ, அடக்கவோ கூடாது என தண்டோரா மூலம் அறிவிக்கப்படுகிறது. ஆனால், எச்சரிக்கையை மீறி, மஞ்சுவிரட்டு நாளில், பலர் முன்னிலையில்ல வேல.ராமமூர்த்தியின் காளையை கலையரசன் அடக்க, அவமானப்பட்டு தலைகுனிகிறார் வேல.ராமமூர்த்தி. இப்படியாக முடிகிறுது முதல் எபிசோட். காளையை அடிக்கியதால் என்ன நடக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்போடு நகர்கிறது அடுத்தடுத்த எபிசோடுகள். வெற்றிமாறனின் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கியிருக்கும் பேட்டைக்காளிக்கு ஒளிப்பதிவு வேல்ராஜ். இசை சந்தோஷ் நாராயணன். இது ஜல்லிக்கட்டு படமல்ல, ஆனால், ஜல்லிக்கட்டை வைத்து நடக்கும் ஜாதிய அரசியலை சொல்லும் படம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து