முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலகத்தலைவன் விமர்சனம்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      சினிமா
Kalagthalaivaan-review 2022

Source: provided

ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன். கதை; 

கார்ப்ரேட் நிறுவனம் தனது வாகனத்தை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகிறது. ஆனால், இந்த வாகனத்தில் பிரச்சனை உண்டு என்று தெரிய வருகிறது. இந்த விஷயம் அதன் எதிரி நிறுவனத்திடம் கசிந்து விடுகிறது. இதனால், நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அந் நிறுவனத்திற்கு மேலும் அடி விழுகிறது. இந்நிலையில், தன்னுடைய போட்டி நிறுவனத்திற்கு இந்த ரகசியத்தை கசிய விட்டது யார் என்று கண்டுபிடிக்கும் பொருப்பை ஆரவிடம் ஒப்படைக்கிறார் அதன் உரிமையாளர். அடிமட்டத்தில் இருந்து கொடூரமான முறையில் விசாரித்து வரும் ஆரவ், இறுதியில் உதயநிதியை நெறுங்கி விடுகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை..

கதாநாயகன் உதயநிதி அருமையான நடிப்பைக் கொடுத்துள்ளார்.  கோபம், அழுகை, காதல், ஆக்‌ஷன் எனப் பல பரிமாணங்களில் மிளிர்கிறார். கதாநாயகியாக வரும் நிதி அகர்வால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படம் நெடுகிலும் பவர்ஃபுல் வில்லனாக ‘பிக் பாஸ் புகழ்’ ஆரவ், மிரட்டி எடுத்திருக்கிறார். முக்கிய ரோலில் கலையரசன் நன்கு நடித்திருக்கிறார். தில்ராஜின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம். கார்ப்பரேட் அத்துமீறலையும் அதற்குத் துணை நிற்கும் அரசாங்கத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஓர் அப்பாவிக் குடும்பத்தையும் ஒரு புள்ளியில் நேர்த்தியாக இணைத்துக் கதை சொன்ன இயக்குனர் மகிழ்திருமேனிக்கு பாராட்டுக்கள். கலகத் தலைவன் விறுவிறுப்பான ஒரு நல்ல படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து