முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்ப கோளாறு: கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Kudankulam 2022 11 23

கூடங்குளம் அணுமின் நிலைய எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால்  1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2-வது அணு உலையில் உள்ள டர்பைன் எந்திரத்தில் நேற்று காலை திடீரென்று தொழில்நுட்ப கோளாறால் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 

அணு உலை எந்திரத்தில் ஏற்பட்ட பழுதினை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் டர்பைனில் ஏற்பட்ட பழுதை சரி செய்த பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. 2-வது அணு உலையில் உள்ள எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. முதலாவது அணு உலையில் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து