முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூரில் ரூ. 9.02 கோடியில் முடிவுற்ற பணிகள் திறப்பு: 37 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
CM-1 2022 11 23

சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தீட்டி தோட்டம் மற்றும் வீனஸ் நகரில் ரூ. 9.02 கோடியில் கட்டப்பட்டுள்ள விளையாட்டுத் திடல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்து, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ. 38.98 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  

கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ. 1.27 கோடியில் புனரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை முதல்வர் திறந்து வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும், வீனஸ் நகரில் ரூ. 7.75 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் மொத்தம் ரூ. 38.98 கோடியில் 37 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். 

முன்னதாக, பந்தர் கார்டன் மற்றும் பள்ளி சாலை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களையும், மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி,  கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மகேஷ் குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் அணில் மேஷ்ராம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் நந்தகோபால், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து