முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Weather-Center 2021 06-30

Source: provided

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நேற்று முன்தினம் மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து. நேற்று தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (நவ.24) 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 4 என்ற அளவில் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து