Idhayam Matrimony

கிறிஸ்துமஸ்- ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு 4 வகைகளில் கேக் தயாரிக்க ஆவின் நிர்வாகம் திட்டம்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Aavin 2022 11 23

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம் இறங்க உள்ளது. பிளம் கேக், வெண்ணிலா, சாக்லேட் உள்பட 4 வகைகளில் கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பால், இனிப்பு வகைகளை தொடர்ந்து நடப்பு மாதமே கேக் தயாரிப்பையும் தொடங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

தமிழக மக்களிடையே ஆவின் தயாரிப்பு நிர்வாகம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தினசரி பொதுமக்கள், பால், நெய் என பலவிதமாக பால் பொருட்களை ஆவின் நிர்வாகத்தில் வாங்கி உபயோகித்து வருகின்றனர். இப்படி பல வாடிக்கையாளர்களை கொண்ட ஆவின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே புது புது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு வகைகள் செய்து அறிமுகப்படுத்தியது.

அந்த வகையில், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளை கருத்தில் கொண்டு 4 வகைகளில் கேக் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், கிறிஸ்துமஸ் கேக் என்று அழைக்கப்படும் பிளம் கேக்கும் அறிமுகமாகிறது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏதுவாக வெண்ணிலா, சாக்லெட் பிளேவர்களிலும் கேக் அறிமுகமாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து