முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிமீறல் புகார்: நடிகர் விஜய் காருக்கு அபராதம்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      சினிமா
Vijay 2022 11 23

Source: provided

சென்னை : விதிமீறல் தொடர்பாக நடிகர் விஜய்யின் காருக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

நடிகர் விஜய் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த வீடியோவை அடிப்படையாக வைத்து மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

கடந்த 20-ந்தேதி நடிகர் விஜய் பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். அங்கு வரும்போது அவர் பயன்படுத்திய காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக சமூக வலைதளத்தில் நபர் ஒருவர் சென்னை போக்குவரத்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் விஐபிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு இதுபோன்ற விலக்கு ஏதும் அளிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு அபராதம் விதிக்க முடியாத என்ற கேள்வியுடன் புகார் எழுப்பியிருந்தார். இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து