முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை : எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு மனு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அவசர சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் தடை...

காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து மத்தி அரசு நீக்கியதால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் மாநிலம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

சிறப்பு சட்டம்... 

இதையடுத்து, ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சிறப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீங்கி, மீண்டும் தமிழகம் முழுவதிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

மீண்டும் வழக்கு...

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின்  சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தன. சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு இதனை விசாரித்து வருகிறது.

ஒத்திவைத்தது...

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன் விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அதேபோல், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த அரசியல் சாசன அமர்வு, விசாரணை நவம்பர் 23ம் (நேற்று) தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இன்று விசாரணை...

இந்த நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீது இன்று விசாரணைக்கு வர உள்ளது. நேற்று வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. 

எழுத்துப்பூர்வ வாதம்...

முன்னதாக நேற்று ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது. அதில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எனவும் தெரிவித்துள்ளது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தார். அதில், ஜல்லிக்கட்டு நடத்துவதில் எவ்வித சட்டமீறல்களும் இல்லை. இதற்காக தமிழக அரசு சிறப்பு சட்டத்தை இயற்றியுள்ளது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஜல்லிக்கட்டில் இடம்பெறும் காளைகள் எவ்விதத்திலும் துன்புறுத்தப்படுவது கிடையாது. இவ்விளையாட்டு 15 மீட்டர் சுற்றளவில்தான் நடைபெறும். இது பாரம்பரிய தமிழக விளையாட்டாகும்.

பாரம்பரிய விளையாட்டு...

கிராமங்கள் முதல் உட்கிராமங்கள் வரை இந்த ஜல்லிக்கட்டை கலாசார விளையாட்டாக நடத்தி வருகிறோம். மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு சட்டமானது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ளது. சுமார் 5 ஆயிரம் ஆண்டு கால பாரம்பரிய விளையாட்டாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது. இந்த ஜல்லிக்கட்டில் புலிக்குளம், காங்கேயம் போன்ற தனித்தன்மை வாய்ந்த காளைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

விதிமீறல் ஏதும் இல்லை...

அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகுதான், ஜல்லிக்கட்டுக்கான சிறப்பு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதனால், இதில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்பதால், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அம்மனுவில் வழக்கறிஞர் குமணன் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து