முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய விளையாட்டு அரங்கு திறப்பு: இறகுப்பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
CM-2 2022 11 23

Source: provided

சென்னை : சென்னை கொளத்தூரில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியருடன் விளையாடினார். 

சென்னை கொளத்தூர் தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ. 1.27 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து மாணவ, மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர் புதிய விளையாட்டரங்கில் மாணவ, மாணவியருடன் இறகுப்பந்து விளையாடினார். 

மேலும் சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து ரூ. 8.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 37 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

கொளத்தூர் பந்தர் கார்டனில் உள்ள சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ 4.37 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்புப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என். நேரு, சென்னை மேயர் பிரியா, சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து