முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் கசையடி தண்டனை மீண்டும் அமலுக்கு வந்தது

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      உலகம்
Afghanistan-2022 11 24

ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமலுக்கு வந்த பிறகு அங்கே பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றனர். முந்தைய ஆட்சியில் இருந்த சட்ட திட்டங்களையும் அவர்கள் மாற்றியுள்ளனர். 

அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்க தலிபான்கள் முடிவு செய்தனர். 

இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் நிகழ்ச்சியை காண வருமாறு முஜாகிதீன் அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் பழங்குடி தலைவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு லோகார் மாகாண கவர்னர் அலுவலகம் அறிவிப்பு விடுத்தது. அதன்படி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 21 கசையடி முதல் 39 கசையடி வரை கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து