முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தும் தி.மு.க. அரசு: சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      தமிழகம்
GK-Vasan-2022 11 24

தமிழகத்தில் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து வீட்டு வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என்று மும்முனை தாக்குதலை மக்கள் மீது ஏவி விட்டு உள்ளது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டினார். 

தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- 

தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து வீட்டு வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என்று மும்முனை தாக்குதலை மக்கள் மீது ஏவி விட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் நிலைகுலைந்த மக்கள் மீது அரசின் இந்த நடவடிக்கை பேரிடியாக விழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக சுமை மீது சுமையை ஏற்றி வருகிறது. 

இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். சிங்கார சென்னையில் மக்கள் நடமாட முடியாதபடி சாலைகள் மரண பள்ளங்களாக மாறி உள்ளன. டெல்டா பகுதியில் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் விவசாயிகளுக்கு 11 நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்க அரசுக்கு மனம் இல்லாதது வேதனை அளிக்கிறது என்று  அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து