முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      விளையாட்டு
24-Ram-50

Source: provided

ஆக்லாந்து: இந்தியா-நியூசிலாந்து இடையே நடைபெறும் இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

டி-20 தொடர்...

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல்-இரவாக நடக்கிறது.

தவான் கேப்டன்...

இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார். வழக்கமான கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. 20 ஓவர் தொடரில் கேப்டனாக இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

சஞ்சு சாம்சன்... 

தவான் தலைமையில் இந்திய அணி கடந்த மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது நியூசிலாந்து தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. 20 ஓவர் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார்.

அர்ஷ்தீப் சிங்...

தவானும், சுப்மன்கில்லும் தொடக்க வரிசையில் ஆடுவார்கள். அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக திகழ்கிறார். தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் மிடில் வரிசையில் ஆடுவார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் சாதிக்க கூடியவர்கள். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து 2 சுழற்பந்து வீரர்கள் இடம் பெறுவார்கள். சுழற்பந்தில் சாஹல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது உள்ளனர்.

111-வது ஆட்டம்...

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின்ஆலன், பிரேஸ்வெல், ஹென்றி, பிலிப்ஸ், சான்ட்னெர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 20 ஓவர் தொடரை இழந்த அந்த அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் வேட்டையில் உள்ளது. இரு அணிகள் கடைசியாக மோதிய 4 ஆட்டத்திலும் (பிப்ரவரி, 2020) நியூசிலாந்தே வெற்றி பெற்றது. மோதுவது 111-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 110 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 49-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டையில் முடிந்தது. இந்தியா-நியூசிலாந்து இடையே உள்ள இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து