முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வே தொடரில் கேப்டன் பதவியில் இருந்து திடீர் நீக்கம்: ஷிகர் தவான் விளக்கம்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      விளையாட்டு
24-Ram-51

Source: provided

வெல்லிங்டன்: ஜிம்பாப்வே தொடரின் போது கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது குறித்து ஷிகர் தவான் தற்போது விளக்கமளித்துள்ளார்.

நியூசி. தொடரில்...

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின் ஜிம்பாப்வே தொடருக்கான அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ஜிம்பாப்வே தொடர் தொடங்கும் நிலையில் கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியதால் தவான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

தவான் கேப்டன்...

இன்று நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே தொடரின்போது கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தவான் தற்போது பதில் அளித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-

வென்றுள்ளோம்.... 

நீங்கள் நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இந்த நிலையில் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கேப்டன் பதவியும், அதன் சவால் பற்றியும் நான் சிறப்பாக உணர்கிறேன். இளம் வீரர்களை கொண்ட அணியுடன் நாம் சில சிறந்த தொடர்களை வென்றுள்ளோம். 

ரோகித் காயம்...

ஜிம்பாப்வே தொடரின்போது, மெயின் அணியின் துணைக் கேப்டனான கே.எல். ராகுல் மீண்டும் விளையாட வரும்போது, அவர் ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறார் என்ற உண்மையை நான் கவனத்தில் கொண்டேன். ஆசிய கோப்பையின்போது ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டால், கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட கேட்டுக் கொள்ளப்படுவார். ஆகவே, ஜிம்பாப்வே தொடர் அவருக்கு சிறந்த பயிற்சியாக இருந்திருக்கும்..

கஷ்டம் இல்லை...

அதனால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. எது நடந்தாலும், அது சிறப்பானவைக்காக நிகழும் என நினைப்பேன். தென்ஆப்பிரிக்கா தொடருக்கான கேப்டனை தேர்வு செய்யும்போது, எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தனர். நான் ஒருபோதும் மோசமானதாக உணர்ந்தது இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து