முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான் தீவில் இன்று ஜி20 பிரதிநிதிகள் மாநாடு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      உலகம்
Andaman 2022 11 25

ஜி20 அமைப்பின் பிரதிநிதிகள் மாநாடு அந்தமானில் இன்று நடைபெற உள்ளது. 

அந்தமானில் பிரபலமாக அறியப்படும் ஹவ்லாக் தீவு எனப்படும் ஸ்வராஜ் தீவில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த தீவிற்கு தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து இரண்டரை மணி நேரம் கடல் மார்க்கமாக செல்ல வேண்டும். இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள், நேற்று போர்ட்பிளேயர் சென்றுள்ளனர்.அங்கிருந்து அவர்கள் ஹாவ்லாக் தீவுக்கு அழைத்து செல்லப்படுவர். இன்று நடக்கும் மாநாட்டில், அடுத்த ஓராண்டுக்கு இந்தியா நடத்த உள்ள ஜி20 மாநாடுகள் பற்றிய விளக்கங்களை, இந்திய பிரதிநிதிகள் அளிக்க உள்ளனர்.  நாளை 27-ம் தேதி பிரதிநிதிகள் தங்கள் நாடுகளுக்கு செல்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து