முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசன்சாட் உள்ளிட்ட 9 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்.வி சி-54 : அனைத்தும் புவி வட்டபாதையில் நிறுத்தப்பட்டதாக தகவல்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      இந்தியா
ISRO 2022 11 25

Source: provided

ஸ்ரீஹரிகோட்டா : புவி கண்காணிப்புக்கான ஓசன்சாட் இஓஎஸ் 6 உட்பட 9 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து 17 நிமிடத்தில் அதிலிருந்து பிரிந்த ஓசன்சாட் செயற்கைக்கோள் அதன் வட்டப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதிப்படுத்தினார்.

கவுன்ட்-டவுன்... 

முன்னதாக, இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்-டவுன் வெள்ளிக்கிழமை காலை 10.26 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், சரியாக நேற்று காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி - சி54 ராக்கெட் ஏவப்பட்டது. முதலில் ஓசன்சாட் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களையும் அதனதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 2 மணி நேரத்தில் மொத்தமுள்ள 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

6-ம் தலைமுறை...

இதில் இஓஎஸ் 6 என்பது ஓசன்சாட் வகையறா செயற்கைக்கோளில் 6-வது தலைமுறையைச் சேர்ந்ததாகும். இந்த செயற்கைக்கோள் 1,117 கிலோ எடை கொண்டது. இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கும்.

கூட்டிணைப்பில்...

இதுதவிர ஐன்எஸ்-2பி செயற்கைக் கோள் இந்தியா - பூடான் ஆகிய நாடுகளின் கூட்டிணைப்பில் தயாரிக்கப்பட்டது. கடந்த 2019-ல்பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பூடான் சென்றபோது, இரு நாடுகள் இடையே செயற்கைக் கோள் கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் தற்போது ஐஎன்எஸ்-2பி செயற்கைக் கோள் ஏவப்படுள்ளது. இது பூடானை வலம்வந்து ஆய்வு மேற்கொள்ளும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 8 நானோ செயற்கைக் கோள்கள் வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

பிற செயற்கைக்கோள்கள்... 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 என்ற நவீன செயற்கைக் கோளுடன் அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட் (4), துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் (2) மற்றும் ஐஎன்எஸ்-2பி, பிக்சல் நிறுவனத்தின் ஆனந்த் என 8 நானோ செயற்கைக் கோள்கள் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து