முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திகார் சிறையில் இருக்கும் டெல்லி அமைச்சரின் மேலும் ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சை

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      இந்தியா
Satyender-Jain 2022 11 25

Source: provided

டெல்லி : திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மே 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில், திகார் சிறையில் உள்ள அவர், படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களைப் படிப்பதும், அவரது கால்களை ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம்பெற்ற சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், அவர் தொடர்பான மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சியினர் பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அதில் சிலர்  சத்யேந்தர் ஜெயின் அறைக்கு வந்து அவரிடம் பேசுவது போலவும் இறுதியாக திகார் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமாரும் வந்து அமைச்சரிடம் பேசுவது போல காட்சிகள் பதிவாகியுள்ளன. இம்மாத தொடக்கத்தில் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து