முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கே.என்.நேருவின் டுவிட்டர் பக்கம் முடக்கம்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      தமிழகம்
KN-Nehru 2022-11-01

Source: provided

சென்னை : அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, அதில் நாசா பற்றிய தகவல் பகிரப்பட்டுள்ளது. 

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் டுவிட்டர் பக்கம் நேற்று முன்தினம் இரவு ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது டுவிட்டர் பக்கத்தில் நாசா பற்றிய பதிவுகள் பகிரப்பட்டது.  இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, 

எனது டுவிட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குழு எனது டுவிட்டர் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. டுவிட்டர் பக்கம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டவுடன் அது குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து