முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்கு தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கம்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      ஆன்மிகம்
Sabarimala 2022 09 09

சபரிமலை மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 

சபரிமலையில் நவம்பர் 16 முதல் 27ஆம் தேதி வரை மண்டல பூஜையும், டிசம்பர் 30 முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கேரளம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால், இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்கள் வசதியை கருத்தில்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  செல்ல பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது

வாராந்திர சிறப்பு ரயில் (06068), எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து நவ.28, டிச.5, 12, 19, 26, ஜன.2 ஆகிய தேதிகளில் (திங்கள் கிழமைகளில்) மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் வந்துசேரும். இதேபோல, தாம்பரத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் (06067), நவ.29, டிச.6, 13, 20, 27, மற்றும் ஜன. 3 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க் கிழமைகளில்) பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை அடையும்.

இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளை யம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம் வழியாக எர்ணா குளத்தை சென்று அடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் முதல் (நவ.25) தொடங்கியது. இதேபோல தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து