முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் புகுந்த மர்ம நபர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
Kanimozhi 2022-11-27

Source: reuters

தூத்துக்குடி ;  தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., வீட்டில் புகுந்த மர்ம நபரை கைது போலீசார் விசாரித்து வருகிறார்கள். அதை தொடர்ந்து கனிமொழியின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. இவர் மக்கள் பணிக்காக தூத்துக்குடி குறிச்சி நகர் பகுதிகளில் தற்காலிகமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில கனிமொழி எம்.பி வீட்டில் இருக்கும் போதே மர்மநபர் ஒருவர் புகுந்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக கனிமொழி எம்.பி. அலுவலக தரப்பினர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபர் குறித்து விசாரணை நடத்தினர். 

அதை தொடர்ந்து தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து கனிமொழியின் தூத்துக்குடி இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனிமொழி எம்.பி வசிக்கும் வீட்டில் மர்மநபர் புகுந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து