முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.எஸ்.பி இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      சினிமா
DSP-music 2022-11-28

Source: provided

கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் டி எஸ் பி. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அப்போது, நான் இங்கு வந்தது விஜய் சேதுபதி எனும் பிரபல கலைஞனுக்காக அல்ல. என்னைப் போலவே சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலுக்காக தான் என்றார். என் தலைமுறையில் நான் பலரை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் போல சாதிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். இந்தப்படத்தில் உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என பேசி முடித்து படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து