பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 'பாதுகாப்பு அதிகாரி' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா அறிவித்தார்.
சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்காததால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார். இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெறுகிறார்.
________________
பாகிஸ்தான் மக்களுக்கு உதவும் பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக முதல்முறையாக பாகிஸ்தானில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது. விளையாடும் மற்றும் ஆதரவு குழு மத்தியில் ஒரு பொறுப்பு உணர்வு உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ளம் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. இது பாகிஸ்தான் நாடு மற்றும் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்துள்ளது. கிரிக்கெட்டை தாண்டி திரும்பக் கொடுப்பது மட்டுமே சரியானது என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் இருந்து எனது போட்டிக்கான கட்டணத்தை பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்கு வழங்குகிறேன். இந்த நன்கொடை பாகிஸ்தானில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என நம்புகிறேன்.
________________
ரொனால்டோவுக்கு ரூ.1,838 கோடி கொடுக்க சவுதி கிளப் விருப்பம்
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த அவர் கால்பந்து உலகில் பல சாதனைகளை புரிந்துள்ளார். அதிகம் பணம் சம்பாதிக்கும் வீரரான ரொனால்டோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இதில் அவர் சாதனையும் புரிந்துள்ளார். இந்த நிலையில் உலக கோப்பை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது ரொனால்டோ இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடட் கிளப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் சவுதி அரேபியா கிளப் ஒன்று ரொனால்டோ தங்கள் கிளப்பில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை வழங்க முன் வந்துள்ளது. ரியாத்தில் உள்ள அல்நாசர் கிளப் ரொனால்டோவை 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ய ரூ.1838 கோடி தர இருப்பதாக விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.612 கோடிக்கு மேல் கிடைக்கும். இதை சி.பி.எஸ். ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.
________________
சென்னை மைதானத்தில் சிக்சர் அடிப்பது கடினம்- சூர்யகுமார்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி அவதாரமாக உருவெடுத்துள்ள சூர்யகுமார் யாதவ் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள ருசிகர பேட்டி வருமாறு:- கேள்வி: 20 ஓவர் கிரிக்கெட்டில் உங்களது சிறந்த இன்னிங்ஸ் எது? பதில்: கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக இன்னிங்சில் 31 பந்தில் 57 ரன்கள் எடுத்தேன். அணியும் வெற்றி பெற்றது. அது எனக்கு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த ஒரு இன்னிங்ஸ். கேள்வி: மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடுவதில் இருந்து ஒரு ஷாட்டை விரும்பி எடுத்துக் கொள்வதாக இருந்தால் அது யாருடைய ஷாட்? பதில்: ரோகித் சர்மா அடிக்கும் புல் ஷாட்.
கேள்வி: உங்களுக்கும், விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடையே 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றால் யார் வெற்றி பெறுவார்கள்? பதில்: விராட் கோலி. கேள்வி: நீங்கள் இதுவரை விளையாடியதில் சிக்சர் விளாசுவதற்கு மிகவும் கடினமாக இருந்த மைதானம் எது? பதில்: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம். இவ்வாறு சூர்யகுமார் கூறினார்.
________________
மாரடோனாவின் சாதனையை சமன் செய்த லியோனல் மெஸ்ஸி
கால்பந்து ஜாம்பவான் டியூகோ மாரடோனாவின் சாதனையை, அர்ஜென்டினா அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸி சமன் செய்துள்ளார். அர்ஜென்டினா அணிக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுத் தந்தவர் மாரடோனா. அவர் உலக கோப்பையில் 21 ஆட்டங்களில் விளையாடி 8 கோல்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் மரடோனாவின் இந்த சாதனையை லயோனஸ் மெஸ்ஸி சமன் செய்தார்.
மெக்சிகோவுக்கு எதிராக ஒரு கோல் அடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதுவரை உலக கோப்பையில் 8 கோல்களை (21 ஆட்டம்) அவர் போட்டுள்ளார். உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர்கள் வரிசையில் கேப்ரியல் பாடிஸ்டுடா 10 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மாரடோனா, மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 3 days 6 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 6 days 2 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-07-02-2023
07 Feb 2023 -
ஈரோட்டில் பணம் பட்டுவாடா:தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வினர் புகார்
07 Feb 2023சென்னை : ஈரோட்டில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு இன்று வருகை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை
07 Feb 2023புதுடெல்லி : முதல்வர் மு.க.
-
பாலியல் வழக்கில் திருநங்கைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை : திருவனந்தபுரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
07 Feb 2023திருவனந்தபுரம் : முதல்முறையாக பாலியல் வழக்கில் திருநங்கைக்கு 7 ஆண்டு சிறை தண்டனையை விதித்து திருவனந்தபுரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
புதிதாக தேர்வான சப் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்களுக்கு பணி நியமன ஆணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
07 Feb 2023சென்னை : புதிதாக 444 சப் இன்ஸ்பெக்டர்கள் 17 டி.எஸ்.பி.க்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர்: தேவநேய பாவாணர் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
07 Feb 2023சென்னை : “நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர் தேவநேய பாவாணர்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
சென்னை ஐகோர்ட்டில் விக்டோரியா கவுரி உள்பட கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்றனர் : பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
07 Feb 2023சென்னை : சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.சி.திலகவதி ஆகியோரை நிய மித்து ஜனாதிபதி திரெளபதி மு
-
நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
07 Feb 2023சென்னை : நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள் என்று சைபர் கிரைம் கருத்தரங்கில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
-
120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
07 Feb 2023சென்னை : 120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
குடிமைப்பணி தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயது வரம்பை தளர்த்த நடவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
07 Feb 2023சென்னை : கொரோனா பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி ப
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க செல்லும் முன்பு முறையாக அறிவிப்பேன்: ஓபிஎஸ்.
07 Feb 2023சென்னை : “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச் செல்வதற்கு முன்பு முறையாக அறிவிப்பேன்” என்று ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு மனு தாக்கல்
07 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.
-
அ.தி.மு.க. வேட்பாளருக்கு 'இரட்டை இலை' ஒதுக்கீடு : ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி அறிவிப்பு
07 Feb 2023சென்னை : அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது : வரும் 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
07 Feb 2023ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், அ.தி.மு.க., தேமுதிக, நாம் தமிழர், உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்றுடன்
-
மின்இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணத்தை பிப்.15-க்கு பிறகு செலுத்த முடியாது
07 Feb 2023சென்னை : மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்காவிட்டால் வரும் 15-ம் தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோவில் யானை குளிப்பதற்கு பிரமாண்ட குளியல் தொட்டி : அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
07 Feb 2023கோவை : கோவையில் கோவில் யானை குளிப்பதற்காக பிரமாண்ட குளியல் தொட்டியை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். சந்திப்பு குறித்து கு.ப.கிருஷ்ணன் பேட்டி
07 Feb 2023சென்னை : தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த கு.ப கிருஷ்ணன் தெரிவித்தார்.
-
அதானி குழும விவகாரத்தில் பார்லி.யில் 4-வது நாளாக எதிர்க்கட்சியினர் அமளி : பிரதமரே வாருங்கள் என கோஷம்
07 Feb 2023புதுடெல்லி : அதானி குழும விவகாரத்தில் பாராளுமன்றத்தில் நேற்று 4-வது நாளாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
-
மீட்புப் படை, நிவாரணப் பொருட்களுடன் துருக்கிக்கு மேலும் 2 விமானங்களை அனுப்புகிறது இந்தியா : நிலநடுக்க பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரிப்பு
07 Feb 2023புதுடெல்லி : துருக்கியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு : பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
07 Feb 2023சென்னை : ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு அளிப்பதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
-
ஏழைகளின் நலனை மையப்படுத்தியே மத்திய அரசின் பட்ஜெட்டுகள் தாக்கல் : பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் பேச்சு
07 Feb 2023புதுடெல்லி : தனது தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஏழைகளின் நலனே மையமாக இருந்தன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மகளிர் ஐ.பி.எல். தொடர்: இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு
07 Feb 2023மும்பை : ஏலத்தில் பங்கேற்க 1,525 வீராங்கனைகள் பதிவு செய்தநிலையில், இறுதிப்பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
கேரள சட்டப்பேரவையில் 4 எம்.எல்.ஏ.க்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
07 Feb 2023திருவனந்தபுரம் : பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை வளாகத்தில் நேற்று முன்தி
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வுமையம் தகவல்
07 Feb 2023சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க. வேட்பாளர் : வரலாறு படைப்போம் என கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
07 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வரலாறு படைக்கும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.