முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவில் வறுமை விகிதம் 64 சதவீதமாக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      உலகம்
Gaza 2022-11-29

பாலஸ்தீனத்தின் காசாவில் வறுமை விகிதம் 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனிய சர்வதேச உறவுகளுக்கான கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக இஸ்ரேல் கடலோரப் பகுதியில் விதிக்கப்பட்ட முற்றுகையாலும், இந்த பகுதியில் வறுமை விகிதம் 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனிய சர்வதேச உறவுகளுக்கான கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக பாலஸ்தீனிய சர்வதேச கவுன்சில் கூறுகையில்,

2007-ம் ஆண்டு ஹமாஸ் கடலோரப் பகுதியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதை தொடர்ந்து, 2 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா பகுதி இஸ்ரேலிய முற்றுகையின் கீழ் உள்ளது.  ஹமாஸ் ஆளுகைக்கு உள்பட்ட கடலோரப் பகுதியானது 360 சதுர கி.மீ நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது உலகின் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு வசிக்கும் 80 சதவீத மக்கள் மனிதாபிமான உதவி மற்றும் சர்வதேச அமைப்புகளின் மானியங்களை நம்பியுள்ளனர்.   காசா பகுதியில் 16 ஆண்டுகளாக இஸ்ரேல் விதித்துள்ள முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று கவுன்சிலின் தலைவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து