முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.786 கோடி நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் அம்மா உணவகம் தொடர்ந்து இயங்கும்: சென்னை மேயர் பிரியா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
Amma-Restaurant 2022 11 22

ரூ.786 கோடி நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும், சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்கள் உணவருந்துவதற்காக அமைக்கப்பட்ட அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனினும், திமுக ஆட்சியில் அதற்கான நிதி சரியாக ஒதுக்கப்படவில்லை, பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மாமன்றக் கூட்டத்தில், அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் கூறியதையடுத்து பேசிய சென்னை மேயர் பிரியா, 'அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில்தான் இருக்கும். அம்மா உணவகம் தொடங்கியதில் இருந்து எப்படி செயல்பாட்டில் உள்ளதோ இனியும் அவ்வாறே தொடரும். பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார். 

சென்னை மேயர் பிரியா தலைமையில் நேற்று முன்தினம் (நவம்பர் 28 ஆம் தேதி) மாமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து