முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்கானிக், குருணை அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம் : மத்திய அரசு நடவடிக்கை

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

புதுடெல்லி : ஆர்கானிக் அரிசி, குருணை அரிசி ஏற்றுமதிக்கான தடையை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரிசிகளின் விலை குறைந்ததை தொடர்ந்து, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

உள்நாட்டு சில்லறை சந்தையில் பாஸ்மதி அல்லாத ஆர்கானிக் அரிசிகளின் விலை உயர்ந்ததால், உள்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க அந்த அரிசிகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது.மேலும், குருணை அரிசியின் உள்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க கடந்த செப்டம்பர் மாதம் அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

இந்தநிலையில், பாஸ்மதி அல்லாத ஆர்கானிக் அரிசிகள், குருணை அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நேற்று நீக்கியது. இந்த அரிசிகளின் விலை குறைந்ததை தொடர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து