முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக சங்கர் நியமனம்: தமிழகத்தில் 9 ஐபிஎஸ். அதிகாரிகள் இடமாற்றம்

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி சங்கரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டம்,  ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் நேற்று பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, தமிழக காவல் துறையின் நிர்வாகப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரி சங்கரை சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக செயல்பட்டு வந்த வெங்கட்ராமன், கூடுதலாக நிர்வாகப் பிரிவையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் ஊர்க்காவல் படை, கமாண்டோ படை ஏ.டி.ஜி.பி.யான ஜெயராம், ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் .தமிழக காவல் துறையின் பயிற்சி பள்ளி மற்றும் அகாடமிகளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூடுதல் பொறுப்பாக கவனித்துக் கொள்வார் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதே போல், கோவை சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக செயல்பட்டு வந்த மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை போக்குவரத்துப் பிரிவில் இருந்த அசோக்குமாரை, சென்னை சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடலோர காவல் படையின் துணை ஆணையர் செல்வக்குமார், தமிழ்நாடு கமாண்டோ படையின் எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உள்பட மொத்த 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து