முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
Kourtalam 2022-11-15

Source: provided

தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெரும்பாலான இடங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிவகிரியில் நேற்று காலை வரை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. இதன் காரணமாக இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனைத்து அருவிகளிலும் அனுமதி வழங்கப்படவில்லை. 

நேற்று காலை மெயினருவியை தவிர மற்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் ஐந்தருவியில் பெண்கள் குளிக்கும் இடத்தையும் சேர்த்து அனைத்து கிளைகளிலும் ஐயப்ப பக்தர்கள் நேற்று காலை குளித்து மகிழ்ந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து