முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் போலீஸ் வாகனம் மீது தற்கொலைபடை தாக்குதல்: 3 பேர் பலி

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      உலகம்
Pak 2022-11-30

Source: provided

லாகூர் : பாகிஸ்தானில் போலியோ தடுப்பு பணிக்காக சென்ற போலீஸ் வாகனம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 2 போலீசார் உட்பட 3 பேர் பலியானார்கள். 

இஸ்லாமிய மதத்தினருக்கு கருத்தடை செய்யும் நோக்கத்தோடு மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட சதி வலைதான் போலியோ தடுப்பூசி என்று இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய பயங்கரவாதிகளும் கருதுகின்றனர். இதனால், போலியோ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். 

இந்நிலையில், அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் உள்ள பலிளி பகுதியில் நேற்று போலியோ மருந்து முகாம் நடைபெற்றது.  இதற்கான பாதுகாப்பு பணிக்காக வாகனத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, போலீஸ் வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும், 20 போலீசார் உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியும் உயிரிழந்தார்.

தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு 25 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து