முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா: கவர்னரை இன்று நேரில் சந்தித்து விளக்குகிறார் அமைச்சர் ரகுபதி

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
Raghupati 2022 11 25

Source: provided

சென்னை : ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து கவர்னர் ஆர்.என். ரவியை இன்று காலை 11 மணிக்கு நேரில் சந்தித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளிக்கிறார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. 

கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக கவர்னர் சில விளக்கம் கேட்டிருந்தார். அதில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா ? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன் லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் கவர்னர் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.

கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை கவர்னர் ஆய்வு செய்துவருகிறார். இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். அப்போது, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளார். 

முன்னதாக உரிய விவரங்களை சேகரித்து முறையாக ஆய்வு செய்து வல்லுநர் குறித்த அறிக்கைக்குப் பிறகே சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டே கொண்டு வரப்பட்டது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் குறித்து விளக்கமளிக்க நேரம் கேட்கப்பட்ட நிலையில் கவர்னர் மாளிகை இன்று ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து