தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அகமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 89 தொகுதிகளில் இன்று முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று நடைபெறும் முதல் கட்டதேர்தலில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் உள்பட மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
89 தொகுதிகளில்...
குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 89 தொகுதிகளுக்கு இன்று (1-ந்தேதி) முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
மும்முனை போட்டி...
முதல்கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்கள் அடங்கும். இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அனல் பறக்கும் தீவிர பிரசாரம் நடைபெற்றது. குஜராத் தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்தனர்.
தீவிர பிரசாரம்...
பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
பிரசாரம் ஓய்ந்தது...
ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் பிரசாரம் செய்தனர். நேற்று முன்தினம் முக்கிய தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
788 வேட்பாளர்கள்...
முதல்கட்ட தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் 89 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய வரவான ஆம் ஆத்மி கட்சி 88 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. சூரத் கிழக்கு தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளர் கடைசி நாளில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரதிய பழங்குடியினர் கட்சி 14 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 12 தொகுதிகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மேலும் 339 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். பா.ஜனதா 9 பெண் வேட்பாளர்களையும், காங்கிரஸ் 6 பெண் வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி கட்சி 5 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளன.
முக்கிய வேட்பாளர்கள்...
இன்று நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் கட்வி, கம்பாலியா தொகுதியிலும், முன்னாள் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான பர்சோத்தம் சோலங்கி பாவ்நகர் புறநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். மோர்பி பால விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டு பிரபலமடைந்த பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. காந்திலால் அம்ருதியா, மோர்பி தொகுதியிலும், பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இட்டாலியா, கதர்காம் தொகுதியிலும் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
மொத்த வாக்காளர்கள்...
குஜராத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 91 லட்சத்து 35 ஆயிரத்து 400 ஆகும். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 760 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேர் ஆண்கள். 1 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேர் பெண்கள். 497 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
வாக்குச்சாவடிகள்...
முதல் கட்ட தேர்தலுக்காக 25 ஆயிரத்து 434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 34 ஆயிரத்து 324 வாக்குப்பதிவு எந்திரங்கள், அதே எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகள், 38 ஆயிரத்து 749 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 27 ஆயிரத்து 978 தலைமை அதிகாரிகள், 78 ஆயிரத்து 985 வாக்குப்பதிவு அதிகாரிகள் உள்ளிட்ட மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 288 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பலத்த பாதுகாப்பு...
குஜராத்தில் முதல்கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபடுகிறார்கள். பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புகளும் போடப்பட்டுள்ளன. குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. வருகிற 8-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கருவேப்பிலை குழம்பு.![]() 2 days 13 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 6 days 17 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03-02-2023.
03 Feb 2023 -
அணு ஆயுத ஏவுதளத்தின் மீது பறந்த சீனாவின் உளவு பலூன் : அமெரிக்கா கண்டனம்
03 Feb 2023வாஷிங்டன் : தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது
03 Feb 2023திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அபுதாபியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் தீ : ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
03 Feb 2023அபுதாபி : அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது.
-
நாசாவின் மின்சார விமானம் இந்த ஆண்டு முதல் அறிமுகம்
03 Feb 2023கேம்பிரிட்ஜ் : அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.
-
தெலுங்கானாவில் விரைவில் திறக்கப்படவிருந்த புதிய தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து
03 Feb 2023ஐதராபாத் : தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் மனு தாக்கல்
03 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க.
-
சென்னை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
03 Feb 2023சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
-
உ.பி. ராம்பூரில் திகில் சம்பவம்: இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்..!
03 Feb 2023லக்னோ : உ.பி. ராம்பூர் மாவட்டத்தில் திகில் சம்பவமாக இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஸ்ரீரங்கம் கோவிலில் கோலாகலமாக நடந்த தைத்தேரோட்ட திருவிழா : கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
03 Feb 2023திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று தைத்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
-
ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
03 Feb 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்
-
பள்ளி சீருடையில் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் : வெறும் 24 நிமிடங்களில் முடிந்தது
03 Feb 2023புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டம் வெறும் 24 மிடத்தில் முடிந்தது. சட்டசபைக்கு பள்ளி சீருடை மற்றும் மிதிவண்டியில் வந்து தி.மு.க.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு மத்தியப்படை வருகை: தேர்தல் ஆணையர் சாகு தகவல்
03 Feb 2023ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
குமரி கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Feb 2023ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தரணி போற்றும் பழனி தைப்பூச திருவிழா
03 Feb 2023அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது.
-
தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்: சி.டி.ரவி
03 Feb 2023சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.
-
அதானி விவகாரத்தில் 6-ம் தேதி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
03 Feb 2023அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
சென்னையில் அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
03 Feb 2023சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
-
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
03 Feb 2023மதுரை : மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன்கூட்டியே விடுதலையை ரத்து செய்யக
-
பிரபல திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
03 Feb 2023சென்னை : இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92).
-
நடுவானில் இன்ஜினில் தீ: ஏர் - இந்தியா விமானம் : அவசரமாக தரையிறக்கம்
03 Feb 2023அபுதாபி : நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
03 Feb 2023அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 படத்தின் பெயர் "லியோ"
03 Feb 2023லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67வது படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1474 கன அடியாக அதிகரிப்பு
03 Feb 2023சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
இந்தியா - ஆஸி., டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண்கிறார் பிரதமர் மோடி
03 Feb 2023நாக்பூர் : இந்தியா-ஆஸி., டெஸ்ட் தொடர் கடைசி போட்டியை நேரில் காண்கிறார் பிரதமர் மோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3 நகரங்களிலும்...