முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முதன்முறையாக ஜோபைடன் கட்சி தலைவர் பதவிக்கு கறுப்பின எம்.பி. ஹக்கீம் தேர்வு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      உலகம்
America 2022-12-01

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி ஜோபைடனின் ஜனநாயகக் கட்சி தலைவர் பதவிக்கு ஹக்கீம் ஜெப்ரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் 

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த மாதம் 8-ம் தேதி தேர்தல் நடந்தது. அதில் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் மெலிதான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர். 

இந்த நிலையில் ஜனவரியில் பிரதிநிதிகள் சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பெலோசி அறிவித்துள்ளார். இதனையடுத்து பிரதிநிதிகள் சபையில் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கு புதிய தலைவர் பதவிக்கு நடந்த போட்டியில் ஹக்கீம் ஜெப்ரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியை வழிநடத்தும் முதல் கறுப்பினத்தவராக ஹக்கீம் ஜெப்ரிஸ்(52) உள்ளார். இவர் அடுத்த ஆண்டு பொறுப்பேற்பார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து