முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓராண்டில் ராஜபக்சே சகோதரர்களின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 4.30 கோடி

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      உலகம்
Rajapakse

Source: provided

கொழும்பு: ராஜபக்சே சகோதரர்களின் வெளிநாட்டு பயண செலவு விவரங்களை அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள் வெளியிட்டுள்ளன. அதில் இருவரும் ஆட்சியில் இருந்த போது முந்தைய ஓராண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயண செலவு ரூ. 4.30 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர். இவர்கள் இருவரும் ஆட்சியில் இருந்த போது முந்தைய ஓராண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்துக்கான செலவினங்களை அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள் தற்போது வெளியிட்டுள்ளது.  

அதாவது இருவரின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 4.30 கோடி என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வங்காளதேசம், இத்தாலிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே மேற்கொண்ட பயணத்துக்கு ரூ. 3.6 கோடி செலவாகி இருக்கிறது. இதை போல நியூயார்க், கிளாஸ்கோ, ஐக்கிய அரபு அமீரக பயணத்துக்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே ரூ. 70 லட்சம் செலவிட்டு உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து