முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது: லாலு பிரசாத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      இந்தியா
Lalu-Prasad-2022-12-01

வரும் 5-ம் தேதி லாலு பிரசாத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக அவரது மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரது மகளே தந்தைக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன் வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவுக்கு வருகிற 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக அவரது மகனும், மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி, குரானி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 'லாலு ஜி இங்கு உங்களை சந்திக்க விரும்பினார். ஆனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார். அங்கு அவருக்கு 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவை தோற்கடிக்க உங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்' என்று கூறினார். தனது உடல் நலக்குறைவுக்கு பா.ஜனதாவின் பழிவாங்கும் அரசியல்தான் காரணம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தக்கூறுமாறும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்ததாக தேஜஸ்வி மேலும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து