முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித மூளைக்குள் சிப் பொருத்தி விரைவில் சோதனை: எலான் மஸ்க்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      உலகம்
Elon-Musk 2022-12-02

மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி மனிதர்கள் மத்தியில் சோதனை செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

மூளைக்குள் சிப்பை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் வகையில் இந்த பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த சிப்களில் ஒன்றை தானே செலுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியிருக்கிறார். 

இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட உள்ளது. அதன் மூலம், மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்த முடியும். இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, தங்களை அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

எலான் மஸ்கின் ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங்க் இதனை மேற்கொள்கிறது. இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூராலிங்க் சோதனை தொடங்கும். மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து